×

கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா: கோவையில் இன்று 3 இடங்களில் நலத்திட்ட உதவி

 

கோவை, அக். 10: திமுக தொழிலாளர் அணி (எல்.பி.எப்.) மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக, திமுக தொழிலாளர் அணி சார்பில், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில், தொழிலாளர் அணி மாநில செயலாளர் பிடிசிஜி செல்வராஜ் முன்னிலையில் நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில், இன்று (செவ்வாய்) காலை 9 மணிக்கு பாப்பநாயக்கன்பாளையம், மதியம் 12 மணிக்கு கிணத்துக்கடவு, மாலை 3 மணிக்கு வேடப்பட்டி ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதேபோல், 11-ம்தேதி (புதன்) நீலகிரி மாவட்டம், 12-ம்தேதி (வியாழன்) திருப்பூர் மாவட்டம், 13-ம்தேதி (வெள்ளி) ஈரோடு மாவட்டம் ஆகியவற்றிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள எல்.பி.எப் நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்து, உதவிட வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா: கோவையில் இன்று 3 இடங்களில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Birthday ,Coimbatore ,DMK Labor Party ,LPF ,State Deputy Secretary ,Tamil Selvan ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...