×

தொட்டபெட்டா பகுதியில் கூட்டமாக உலா வரும் காட்டு மாடுகளால் ஆபத்து

 

ஊட்டி, அக். 10: தொட்டபெட்டா பகுதியில் கூட்டமாக உலா வரும் காட்டு மாடுகளால் சுற்றுலா பயணிகள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு மாடுகள், சிறுத்தை, கரடி ஆகிய அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இவைகள் உணவு தேடி மக்கள் வாழும் பகுதிக்கு வரும்போது மனித விலங்கு மோதல் ஏற்படுகிறது.

தற்போது, அனைத்து பகுதிகளிலும் காட்டு மாடுகள் விவசாய நிலங்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் கூட்டம் கூட்டமாக மலம் வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை சில சமயங்களில் பொதுமக்களை விரட்டி தாக்குகின்றன. இதில், பொதுமக்களுக்கு காயம் ஏற்படுவது மட்டுமின்றி சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் தொட்டபெட்டா பகுதியில் கூட்டம் கூட்டமாக வளம் வரும் காட்டு மாடுகளால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இவை ஊட்டி – கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் வலம் வருவதால் இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவைகளை இப்பகுதிகளில் இருந்து விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தொட்டபெட்டா பகுதியில் கூட்டமாக உலா வரும் காட்டு மாடுகளால் ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Thottapetta ,Ooty ,Tottapetta ,Dinakaran ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ