×

புதுக்கோட்டை அருகே காரில் புகையிலை கடத்தியவர் கைது

புதுக்கோட்டை,அக்.9: புதுக்கோட்டை அருகே காரில் புகையிலை கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் மேற்பார்வையில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜன் மற்றும் போலீசார் புதுக்கோட்டை, கூட்டாம்புளி பாலம் அருகில் வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மகன் மாரிராமர் (35) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மாரி ராமரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 95 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புதுக்கோட்டை அருகே காரில் புகையிலை கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tuticorin District S.P. Tuticorin ,Balaji Saravanan ,Dinakaran ,
× RELATED பயனாளிக்கு இழப்பீடு தொகை வழங்காததால்...