×

பட்டாசு விற்பனை செய்ய இடம் தேர்வு

இளம்பிள்ளை, அக்.10: இடங்கணசாலை நகராட்சி மற்றும் மகுடஞ்சாவடி ஒன்றியம் உள்ளிட்ட ஊர்களில், தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு விற்பனை செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, ஒரே இடத்தில் பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்ய, இடங்கணசாலை நகராட்சி, ரெட்டியூர் பகுதியில் கடைகள் வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. சங்ககிரி ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார் ரமேஷ், நகர்மன்ற தலைவர் கமலக்கண்ணன், துணை தலைவர் தளபதி, கமிஷனர் சேம்கிங்ஸ்டன், மகுடஞ்சாவடி ஆர்ஐ செல்வராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், சங்ககிரி தீயணைப்பு போலீசார் மற்றும் மகுடஞ்சாவடி போலீசார் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர்.

The post பட்டாசு விற்பனை செய்ய இடம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Yumupillai ,Itanganasalai Municipality ,Makudanjavadi ,Union ,Diwali ,
× RELATED ஆன்லைன் கோளாறால் வீட்டு வரி ரசீது தாமதம்