×

மினி மாரத்தான் போட்டி

காடையாம்பட்டி, அக்.10: தீவட்டிப்பட்டியில் காவல் துறை சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போட்டியை இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தொடங்கி வைத்தார். இதில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தும், அதன் மூலம் தகவல்களை எப்படி பெறவேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கக்கூடாது. விபத்துகளை குறைப்பதற்கான வழிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த கவிதை, ஓவியம் மற்றும் வாசகப்போட்டி நடத்தப்பட்டது. சிறப்பாக கவிதை, ஓவியம் மற்றும் வாசகங்கள் எழுதி மற்றும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த இளைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் எஸ்ஐ பழனிச்சாமி, கருப்பண்ணன் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மினி மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Tags : Kadaiyampatti ,Police Department ,Divattipatti ,Mini ,Dinakaran ,
× RELATED தொண்டியில் அனுமதி இல்லாமல் சாலை ஓரங்களில் டிஜிட்டல் பேனர்