×

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மகளிர் உரிமை தொகை மறுபதிவு முகாம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மகளிர் உரிமை தொகை மறுபதிவு முகாம் நடைபெற்றது. தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற சிறப்பான திட்டங்களில் ஒன்றான மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில், உரிமை தொகை கிடைக்கப்பெறாமல் விடுபட்டவர்கள் மீண்டும் உரிமை தொகைக்கான பதிவு செய்யும் முகாம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. முகாமிற்கு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் திமுக செயலாளருமான யுவராஜ் தலைமை தாங்கினார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏவும், ஒன்றிய திமுக செயலாளருமான தமிழ்மணி மகளிர் உரிமை தொகை மறுபதிவு செய்யும் முகாமை துவக்கி வைத்தார். முகாமில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் ஆர்வமுடன் வந்து பதிவு செய்தனர். இதில், பேரூராட்சி கவுன்சிலர் சத்தியமூர்த்தி திமுக நிர்வாகிகள் செங்குட்டுவன், விவேகானந்தன், சரவணன், இளங்கோ உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மகளிர் உரிமை தொகை மறுபதிவு முகாம் appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Thirukkalukunram ,Tamil Nadu government ,
× RELATED திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில்...