×

மணலில் கார் சிக்கியதால் டென்ஷனான ஒன்றிய அமைச்சர்

மரக்காணம், அக். 10: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவர் கிராமத்தில் மீன்வளத்துறை சார்பில் பிரதம மந்திரியின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு கடன் அட்டை வழங்குதல் மற்றும் மீனவர்களோடு கலந்துரையாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மீனவர்கள் வைத்த கோரிக்கைகளின்படி அனுமந்தை கடற்கரையோரம் பார்வையிட்டு ஆய்வு செய்ய விழா மேடையின் எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரில் ஏறினார். இந்த காரை ஓட்டுநர் எடுத்த போது எதிர்பாராதவிதமாக காரின் பின்பக்க டயர்கள் மணலில் சிக்கிக் கொண்டது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மணலில் சிக்கிய அமைச்சரின் காரை தள்ளினர். ஆனாலும் கார் வெளியில் வரவில்லை. இதனால் டென்ஷனான அமைச்சர் உடனடியாக அவரது காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது வேறு ஒரு கார் தயார் நிலையில் இருந்தது. அந்த காரில் ஏறி அனுமந்தை கடற்கரை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த இடத்தில் மீனவர்கள் மற்றும் மீனவர் பஞ்சாயத்தார்கள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post மணலில் கார் சிக்கியதால் டென்ஷனான ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Union ,minister ,Marakanam ,Sagar ,Anumanthai ,Villupuram ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது...