×

மார்த்தாண்டத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம்

மார்த்தாண்டம், அக். 10: குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், வரும் 17ம் தேதி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழகியமண்டபத்தில் கலந்து கொள்ள இருக்கும் மாவட்ட இளைஞரணி ஊழியர் கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்தும், வரும் 14ம் தேதி சென்னையில் நடக்கும் மகளிர் உரிமை மாநாடு ஆயத்தப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரெமோன், பப்புசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகநாதன், மாவட்ட துணைச் செயலாளர்கள் புஷ்பலீலா ஆல்பன், ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் டி.பி.ராஜன், வழக்கறிஞர் ராஜேஷ் குமார், குழித்துறை நகர செயலாளர் வினுக்குமார், பேரூர் செயலாளர்கள் சத்யராஜ், ஆனந்த ராஜன், மணி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.

The post மார்த்தாண்டத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Marthandam ,Kumari West District ,Marthand ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில்...