×

சீனா ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் சாம்பியன்

பெய்ஜிங்: சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை லிட்மிலா சாம்சோனோவா (24வயது, 16வது ரேங்க்) உடன் மோதிய ஸ்வியாடெக் (2வது ரேங்க், 22 வயது) 6-2, 6-2 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடங்களில்முடிவுக்கு வந்தது.

நடப்பு சீசனில் தனது 5வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஸ்வியாடெக், ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிய 16வது பட்டம் இது. இந்த வெற்றியால் தரவரிசைப் புள்ளிகளின் எணிக்கை அதிகரிக்கவே ஸ்வியாடெக் (8890) முதல் இடத்தில் உள்ள சபலென்காவை (9480) நெருங்கினார். சீனா ஓபனில் சபலென்கா காலிறுதியிலேயே தோற்று வெளியேறியதால் அவரது புள்ளிகள் கணிசமாகக் குறைந்தன.

The post சீனா ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : China Open Tennis Sviatek ,Beijing ,China Open ,Ika ,Dinakaran ,
× RELATED மனிதர்களின் குரலை வைத்து உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஆடுகள்