×

பண்ருட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

பெரும்புதூர்: பெரும்புதூர் ஒன்றியம் பண்ருட்டி பகுதியில், பெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், பெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். பண்ருட்டி ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் வரவேற்றார். பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, மாவட்ட தலைவர் குன்னம் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் கணேஷ்பாபு, ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி டான்போஸ்கோ, மாவட்ட கவுன்சிலர் சோகண்டி பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் ஆரணி பாலா கலந்துகொண்டு, திமுக அரசின் இரண்டாண்டு சாதனைகள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பண்ருட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary General Meeting ,Panruti ,Perumputhur ,centenary general meeting ,Perumputur ,Perumputur south union ,DMK ,Dinakaran ,
× RELATED கடலூர், பண்ருட்டி பகுதியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பு