×

பெரும்புதூர் அருகே ஏசி திருடிய ஊழியர்கள் கைது

பெரும்புதூர்: பெரும்புதூர் அருகே தனியார் குடோனில் இருந்து ஏசி திருடிய 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கணேஷ் (25), காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (27). இவர்கள், 2 பேரும், பெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் குடோனில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருங்காட்டுக்கோட்டை குடோனில் இருந்து கோயம்புத்தூர் பகுதிக்கு லாரியில் ஏசி பெட்டிகள் அனுப்பி வைக்கபட்டுள்ளன. இதில், 6 ஏசி பெட்டிகளை கணேஷ், பிராதப் ஆகியோர் சேர்ந்து திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குடோன் நிர்வாகம் சார்பில் பெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கணேஷ், பிரதாப் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த ஏசி குளிர்சாதன பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேரையும் பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெரும்புதூர் அருகே ஏசி திருடிய ஊழியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Perumbudur ,Perumputur ,Madurai ,Dinakaran ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...