×

ஜனவரி 1 முதல் முதியோர் ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும்: முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

திருமலை: ஜனவரி 1 முதல் முதியோர் ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும் என்று விஜயவாடா இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் பேசினார். ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், முதல்வர் ஜெகன்மோகன் பங்கேற்று பேசியதாவது: மாநிலத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 4 ஆண்டு கால ஆட்சியில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

99 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் முதியோர் ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும். மார்ச் மாதத்தில் தேர்தலுக்கு தயாராக வேண்டும். நமது தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு வீடாக கொண்டு செல்வோம். நாம் செய்த நன்மைகளை கிராமம், கிராமமாக அனைவருக்கும் தெரிவிக்கும் பொறுப்பை நான் வைத்துள்ளேன். நீங்கள் அனைவரும் மண்டல அளவில் இருந்து வருகிறீர்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

The post ஜனவரி 1 முதல் முதியோர் ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும்: முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CM ,Jekanmohan ,Thirumalai ,Vijayawada Indira Gandhi Stadium ,Jekanmogan ,
× RELATED கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு