×

நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி மழலையர்களுக்கான சாரணர் இயக்க தொடக்க விழா

திருவள்ளூர்: திருவள்ளூர், நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறு வயதிலேயே சமூக அக்கறை உடைய மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக, கே.ஜி மழலையர்களுக்கான பாரத சாரண, சாரணியர் இயக்கத்தை நமது பள்ளியில் தொடங்க வேண்டும் என்று பள்ளி தாளாளர் ப.விஷ்ணுசரண், இயக்குனர் பரணிதரன் ஆகியோர் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து கே.ஜி. மழலையர்களுக்கான பாரத சாரண, சாரணியர் புன்னிஸ் பிரிவினை தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் தலைமை தாங்கினார். துணை முதல்வர் கவிதா கந்தசாமி, ஒருங்கிணைப்பாளர் சரண்யா, தலைமை ஆசிரியர்கள் ஷாலினி, சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் பாரத சாரண, சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் சாம்சன் இளங்கோவன் சிறப்பு விருந்தினர் கலந்துகொண்டு கே.ஜி. மழலையர்களுக்கான பாரத சாரண, சாரணியர் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, சிறுவயது முதல், கல்வியிலும், ஒழுக்கத்திலும், நாட்டு நலனிலும் சமூக அக்கறை கொண்ட நல்ல குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கே.ஜி. மழலையர்களுக்கான பாரத சாரண, சாரணியர் புன்னிஸ் பிரிவு சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

The post நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி மழலையர்களுக்கான சாரணர் இயக்க தொடக்க விழா appeared first on Dinakaran.

Tags : KG Kindergartners ,Niketan Matric Higher Secondary School ,Thiruvallur ,Niketan Matric Higher School ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்