×

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு இன்றும், நாளையும் மட்டுமே பேரவை கூட்டம் நடக்கும்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்றும், நாளையும் மட்டுமே நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று பிற்பகல் முடிந்ததும், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது: 2023-24ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கையை சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விவாதம் 10ம் தேதி (இன்று) நடைபெறும். மேலும் சில அரசு அலுவல்களும் நடைபெறும்.11ம் தேதி (புதன்) அன்று, கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு நிதித்துறை அமைச்சர் பதிலளிப்பார். அதைத்தொடர்ந்து கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைக்கான நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும் 2014-15 மற்றும் 2015-16ம் ஆண்டுகளுக்கு உரிய மிகைச் செலவுக்கான மானிய கோரிக்கைகள், சட்டப்பேரவைக்கு அளிக்கப்படும். அதன் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். பின்னர் அதற்கான நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, விவாதமின்றி ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டால் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும். அந்த வகையில் இன்றும், நாளையும் மட்டும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். ஆஸ்திரேலியா நாடாளுமன்ற சபாநாயகர், உறுப்பினர்கள், செனட் உறுப்பினர்கள் நமது சட்டப்பேரவைக்கு வந்து மாடத்தில் இருந்து பார்வையிட்டு மகிழ்ச்சியை வெளியிட்டனர். உலகத்தில் ஜனநாயகத்திற்கு முதல் புள்ளி வைத்ததே திராவிட இயக்கம்தான். சமூகநீதி என்ற வார்த்தையை பயன்படுத்தியதும் திராவிட இயக்கம்தான். அதுதான் திராவிட மாடல். இவ்வாறு அவர் கூறினார்.

The post சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு இன்றும், நாளையும் மட்டுமே பேரவை கூட்டம் நடக்கும் appeared first on Dinakaran.

Tags : Legislative ,Assembly ,Appa ,Chennai ,Speaker ,Appavu ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...