×

திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை ஓஎம்ஆர் சாலையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி(விசிக) பேசியதாவது: கேளம்பாக்கம், படூர் சாலை சந்திப்பில் இருக்கின்ற பூர்வங்கரா என்ற இடத்தில் ஒரு ‘மிஸ்சிங் லிங்ஸ்’ இருக்கிறது. இந்த பணிகள் நிறைவடைய வேண்டும் என்றால் அதை சீரமைத்து தர ேவண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: சென்னையை பொறுத்தவரை மழைக்காலத்துக்கு முன்னதாகவே பணிகள் நடைபெற வேண்டும் என்று ஒருமுறைக்கு பல முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் துறையின் ஆய்வு கூட்டங்களை நடத்துகிறார். ஓஎம்ஆரை பொறுத்தவரை விரிவுப்படுத்தியிருக்கிற தரமான சாலையாக அது இருந்தது. இப்பொழுது மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேண்டும் என்பதற்காக பல இடங்களில் வெட்டி போட்டு இருக்கிற சூழ்நிலை இருக்கிறது. அதை தான் எம்எல்ஏ கூறியிருக்கிறார். 2 நாட்களுக்கு முன்னால் சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர், கோட்ட பொறியாளர்களை அழைத்து பேசி ஏற்கனவே நீங்கள் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறீர்கள். அதை அவர்களிடமே கொடுத்து இந்த பிரச்னையை உடனே தீர்த்து விட்டு சட்டமன்ற உறுப்பினரிடத்திலே உடனே தகவலை சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். அது விரைந்து நடைபெறும்.

The post திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை ஓஎம்ஆர் சாலையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MLA ,S.S.Balaji ,Minister ,A.V.Velu ,Tiruporur ,S.S. Balaji ,Visika ,Legislative Assembly ,Kelambakkam, Badur road ,Dinakaran ,
× RELATED நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள...