×

சட்டப்பேரவை மாடத்தில் ஆஸி. சபாநாயகர், எம்பிக்கள்

தமிழக சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டம் நேற்று நடந்தது. சட்டப்ேபரவை கூட்டத்தை பார்ப்பதற்காக ஆஸ்திரேலிய சபாநாயகர் மில்டன் டிக் மற்றும் அந்த நாட்டின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள்பேரவை மாடத்திற்கு வந்தனர். அங்கு முக்கிய பிரமுகர்கள் அமரும் மாடத்தில் இருந்துபேரவை நிகழ்வுகளை கண்டுகளித்தனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, ஆஸ்திரேலிய குழு வருகை குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் அவையில் தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாடத்தில் இருந்த மில்டன் டிக்கும் எழுந்து நின்று அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அவர் வணக்கம் தெரிவித்ததும் அவையில் இருந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். மேலும் மேஜையை தட்டி வரவேற்றனர். பின்னர் அவர்கள் எம்எல்ஏக்கள் பேசுவதையும், அதற்கு அமைச்சர்கள் விளக்கம் அளிப்பதையும் பார்த்தனர். பேரவை செயலாளர் சீனிவாசன் பார்வையாளர் மாடத்தில் அவர்களுடன் அமர்ந்து விளக்கம் அளித்தார். சிறிது நேரம் அவர்கள் அவை நடவடிக்கைகளை பார்த்து விட்டு புறப்பட்டு சென்றனர்.

The post சட்டப்பேரவை மாடத்தில் ஆஸி. சபாநாயகர், எம்பிக்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Speaker ,Milton Dick ,Aussies ,Parliament House ,Dinakaran ,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...