×

இலங்கைக்கு திருப்பி அனுப்ப கோரி மனு சாந்தன் வழக்கு விசாரணையில் இருந்து ஒரு நீதிபதி விலகல்: வேறு அமர்வுக்கு மாற்ற ஐகோர்ட் பரிந்துரை

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான சாந்தன் இலங்கையை சேர்ந்தவர். அவர் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இலங்கையில் உள்ள தனது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனிருந்து அவரை கவனித்துக்கொள்ளும் வகையில் திருச்சி முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனுவை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post இலங்கைக்கு திருப்பி அனுப்ப கோரி மனு சாந்தன் வழக்கு விசாரணையில் இருந்து ஒரு நீதிபதி விலகல்: வேறு அமர்வுக்கு மாற்ற ஐகோர்ட் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Manu Chandan ,Sri Lanka ,ICourt ,Chennai ,Chandan ,Supreme Court ,Rajiv Gandhi ,
× RELATED சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு...