×

சென்னை விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது: 4 ஆண்டுக்கு பிறகு குவைத்திலிருந்து வந்தபோது சிக்கினார்

சென்னை: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த குற்றவாளி குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்தபோது சர்வதேச விமான நிலையத்தில் 4 ஆண்டுக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நேற்று காலை குவைத்தில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த ஒரு பயணியின் ஆவணங்களை சோதனை செய்தபோது அவர் தலைமறைவு குற்றவாளி என்பது என்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் பெற்ற சென்னை விமான நிலைய போலீசார் அந்த நபரை பிடித்து பாதுகாப்பு அறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாராணை நடத்தியதில், அந்தப் பயணி, திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த நூர் முகமது (46) என்பது தெரியவந்தது. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவியை நூர் முகமது அடித்து, கொடுமைப்படுத்தியுள்ளார். இதுகுறித்து முதல் மனைவி நூர் முகமது மீது, நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 2019ம் ஆண்டு புகார் அளித்தார். இதையடுத்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், நூர் முகமது மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் நூர் முகமது வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார்.

இதனால், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நூர் முகமதுவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசியும் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குடியுரிமை அதிகாரிகள், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு, 4 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளியான நூர் முகமது, குவைத்தில் இருந்து விமானத்தில் வந்தபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். என்ற தகவலையும் தெரிவித்தனர். இதையடுத்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து, தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையம் வந்து நூர் முகமதுவை கைது செய்து அழைத்து சென்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது: 4 ஆண்டுக்கு பிறகு குவைத்திலிருந்து வந்தபோது சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Absconder ,Chennai airport ,Kuwait ,CHENNAI ,Nannilam, Tiruvarur district ,
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!