×

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது

சென்னை: இன்று (09.10.2023) சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையை சிவ. வீ. மெய்யநாதன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் தமிழ் நாடு அரசு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் எவ்வாறு முன்னோடி மாநிலமாகச் செயல்படுகிறது எனவும், கட்டிட இடிமானக் கழிவுகளை எவ்வாறு மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் உரையாற்றினார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளவும், அதன் விளைவுகளை தடுக்கவும். வருங்கால சந்ததியினருக்கு ஒரு விரிவான விழிப்புணர்வு தேவை என்பதை நன்கு அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம் ஆகிய இயக்கங்களை உருவாக்கியுள்ளார். காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக இன்று சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த கருத்துப் பட்டறை நடத்தப்பட்டது. காலநிலை மாற்றம் என்பது யாராலும் மறுக்க முடியாத நிகழ்வு. இது இயற்கை சூழல், மனித உயிர்கள். உடமைகள் மற்றும் பொருளாதார செயல்பாடுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மஞ்சப்பை என்பது தமிழர் பண்பாட்டில் வேரூன்றி உள்ளது. எனவே மஞ்சப்பை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற “மீண்டும் மஞ்சப்பை” என்ற திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுப்பதற்கு இந்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக காலநிலை மாற்றத்திற்கான தனி நிறுவனமாக தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் கீழ் மூன்று இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 2031-ம் ஆண்டுக்குள் சுமார் 265 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 3.15 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2023-2024ஆம் ஆண்டில் 6.44 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது, இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 1900 நாற்றங்கால்களை வளர்க்கத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே வனத்துறையால் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான 14 நிலங்களை ராம்சார் தளங்களாக தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. மேலும் 2 ராம் சார் தளங்கள் அறிவிப்பு செய்ய அரசின் பரிசீலனையில் உள்ளது.

காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து காலநிலை மாற்றத்திற்கான சிறப்பு நிர்வாகக் குழுவினை அமைத்துள்ளார். காலநிலை மாற்ற இயக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்டு மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்கள். மாவட்ட காலநிலை மாற்ற இயக்க இயக்குநர்களாவும், மாவட்ட வன அலுவலர்களை மாவட்ட காலநிலை அலுவலர்களாகவும் இந்த அரசு நியமித்துள்ளது. அண்ணா பல்கலைகழக வளாகத்தில் தமிழ்நாடு அரசால் “கால வடிவமைப்பு மையம்” தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக 25 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு “பசுமை பள்ளிகளாக” மாற்றுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அவர்களின் பசுமை புத்தாக்கத் திட்டத்தின்” மூலம் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் நாற்பது “பசுமை தோழர்கள்” (Green Fellows) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 10 கிராமங்களை “காலநிலை திறன்மிகு கிராமங்களாக” மாற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் உரையாற்றுகையில் காலநிலை மாற்றத்திற்கெதிரான தமிழ் நாடு அரசின் முன்னோடித் திட்டங்கள் குறித்தும், தமிழ்நாட்டின் வனப்பரப்பில் தற்போது 23% சதவிகிதமாக இருக்கும் வனப்பரப்பினை 33% சதவிகிதமாக அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் உரையாற்றினார்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா ஸாஹூ, , அவர்கள் தமது உரையின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியினை தங்களுடைய தொகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்ள தொகுதியின் வனப்பரப்பை மரகதப் பூஞ்சோலைகள் மூலம் அதிகரிக்குமாறும், பல காலநிலை திறன்மிகு கிராமங்களை உருவாக்குமாறும், தங்களது தொகுதியில் நிகர பூஜ்ய கார்பன் இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் மற்றும் பல புதிய முயற்சிகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்கள்.

இக்கருத்துப்பட்டறையில் சுற்றுலாத் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீ நிவாஸ் ரெட்டி, திருமுனைவர் தீபக் ஸ்ரீவஸ்தவா, தலைமை திட்ட இயக்குநர், பசுமை தமிழநாடு மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கம், முனைவர்.ஜெயந்தி, தலைவர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தீபக் எஸ் பில்கி, இ.வ.ப., இயக்குநர், சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற இயக்கத்துறை மற்றும் தலைமை திட்ட இயக்குநர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், முனைவர். கி.சீனிவாசன், செயலாளர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம் மற்றும் கோ. சுந்தர்ராஜன், தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சிமன்ற குழு உறுப்பினர், முனைவர்.குரியன் ஜோசப், இயக்குநர், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம், அண்ணா பல்கலைகழகம் ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Council ,President ,Abawa ,Legislative Council ,Kalyavanar Stadium ,Chennai ,Change ,Tamil Nadu Assembly ,Speaker ,Abadu ,
× RELATED ஈரான் அதிபர் ரைசியின் உடல் இன்று அடக்கம்