×

திண்டிவனத்தில் பைக் மீது மினிவேன் மோதி விபத்து: வாலிபர் பரிதாப பலி

*பொதுமக்கள் சாலை மறியல்: போலீசார் விசாரணை

திண்டிவனம் : திண்டிவனம் அருகே பைக் மீது மினிவேன் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் மகேந்திரன் (34). இவர் நேற்று இரவு செஞ்சி சாலையில் பைக்கில் பட்டணம் சென்று கொண்டிருந்தார். அப்போது இருதயபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து செஞ்சி மார்க்கமாக சென்ற மினிவேன் மகேந்திரன் ஓட்டிச்சென்ற பைக் மீது அதிவேகமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மகேந்திரனின் உடல் சாலையிலேயே கிடந்த நிலையில், 108 ஆம்புலன்சில் ஏற்றாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திண்டிவனம்-செஞ்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரோசணை காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டிவனத்தில் பைக் மீது மினிவேன் மோதி விபத்து: வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Dindivan ,Dindivanam ,Dinakaran ,
× RELATED லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு