×

செப்டம்பரில் வாகன விற்பனை 20% அதிகரிப்பு

டெல்லி: 2022 செப்டம்பரை விட 2023 செப்டம்பரில் இந்திய வாகன விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக வாகன டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் செப்டம்பரில் 18.9 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. 2022 செப்டம்பரை விட இவ்வாண்டு செப்டம்பரில் இருசக்கர வாகன விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. 3 சக்கர வாகனங்களின் விற்பனை 2022 செப்டம்பரைவிட கடந்த மாதம் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. கார்களின் விற்பனை 2022 செப்டம்பரை விட கடந்த செப்டம்பரில் 19 சதவீதம் உயர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளது.

 

The post செப்டம்பரில் வாகன விற்பனை 20% அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Automobile Dealers Association ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...