×

திண்டிவனத்தில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற பாமகவினர் தடுத்து நிறுத்தம்: காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் அதிரடி

 

திண்டிவனம், அக். 9: திண்டிவனத்தில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அக்கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று, பாமக கொள்கை விளக்கும் வகையிலும், கட்சியினரை ஒருங்கிணைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதனால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சாலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சுமார் 200க்கும் மேற்பட்ட பைக்கில் பாமகவினர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் பேரணியாக சென்றனர். அப்போது திண்டிவனம்-புதுச்சேரி சாலை, மரக்காணம் கூட்டு பாதை அருகே போலீசார் பேரணியாக சென்ற பாமகவினரை தடுத்து நிறுத்தி, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பேரணியாக செல்லக்கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற பாமகவினர் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின்னர் கட்சி தலைமை உத்தரவின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post திண்டிவனத்தில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற பாமகவினர் தடுத்து நிறுத்தம்: காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Bamakavins ,Dindivan ,Tindivanam ,Bamaka ,Bamakavinas ,Dinakaran ,
× RELATED திண்டிவனத்தில் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!!