×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மயிலேரிபாளையத்தில் ரேக்ளா பந்தயம்

 

மதுக்கரை, அக்.9: கோவையை அடுத்த மயிலேரிபாளையம் ஊராட்சி திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குதிரை பந்தயம் மற்றும் ரேக்ளா போட்டிகள் நடைபெற்றது. மயிலேரிபாளையத்தில் இருந்து ஏலூர் பிரிவு செல்லும் சாலையில் நடைபெற்ற இந்த போட்டியை கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார், கிளை செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி திருமூர்த்தி, துணைத்தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடைப்பெற்ற இந்த போட்டியில் கோவை,சூலூர், பல்லடம், தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, தாராபுரம், அவினாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 60 ஜோடி குதிரைகளும், 330 ஜோடி ரேக்களா காளை மாடுகளும் கலந்து கொண்டு சீறி பாய்ந்தன. ரேக்ளா போட்டியை காண சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும், 2ம் பரிசாக அரை பவுன் தங்க நாணயமும், 3ம் பரிசாக கால் பவுன் தங்க நாணயங்களும் மற்றும் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ரகுதுரைராஜ், மாவட்ட கவுன்சிலர் ராஜன், மதுக்கரை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரகாஷ், தூய்மை பணியாளர்கள் நலவாரிய துணைத்தலைவர் கனிமொழி, கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், நகர செயலாளர் கனகராஜ், நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், ஒன்றிய அவைத்தலைவர் ராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் ரகு(எ)சண்முகசுந்தரம், ஏலூர் காமராஜ், கோடை குமார், முத்துக்கவுண்டனுர் குமார், ராதாகிருஷ்ணன், மாவுத்தம்பதி கணேஷ், மேத்யூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மயிலேரிபாளையத்தில் ரேக்ளா பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Rekla ,Mayleripalaya ,Madukkarai ,Uradchi Dhimuka ,Rekla Race ,Maileri Palace ,Dinakaraan ,
× RELATED ‘தமிழ் தெம்பு’ திருவிழாவால் விழா...