×

தேவதானப்பட்டியில் போதையில் போலீசாரை கத்தியால் குத்தியவர் கைது

தேவதானப்பட்டி, அக். 9: தேவதானப்பட்டி போலீசார் கதிரேசன் (48) மற்றும் வாலிராஜன்(42) ஆகியோர் அரிசிக்கடை பஸ் ஸ்டாப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் நின்று கொண்டிருந்த தெற்கு தெருவைச் சேர்ந்த முத்துசாமி (24) என்பவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரை போலீசார் கண்டித்து வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த முத்துசாமி, தான் வைத்திருந்த கத்தியால் கதிரேசன் கழுத்தில் குத்தினார். இதில் போலீசார் கதிரேசன் நூலிழையில் தப்பினார். கழுத்தில் பலத்த காயம் அடைந்த கதிரேசன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் முத்துசாமியை கைது செய்தனர்.

The post தேவதானப்பட்டியில் போதையில் போலீசாரை கத்தியால் குத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Devdhanapatti ,Devadanapatti ,Kathiresan ,Valirajan ,Dinakaran ,
× RELATED தேவதானப்பட்டி பகுதியில் தென்னை...