×

திருவொற்றியூர் பேருந்து நிறுத்தத்தில் இடிந்து விழும் நிலையில் நிழற்குடை: புதிதாக கட்டித்தர கோரிக்கை

 

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள பேருந்து நிழற்குடையை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவொற்றியூரில் இருந்து மாட்டுமந்தை ரயில்வே மேம்பாலம், பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் வழியாக சி.பி.சி.எல் சந்திப்பை கடந்து தினமும் ஏராளமான மாநகர பேருந்துகள் சென்று வருகின்றன. இவ்வாறு உள்ள பேருந்தில் பயணிக்க தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்தந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பின்னர் மாநகர பேருந்தில் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் அருகே உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இவ்வாறு உள்ள இந்த ஆபத்தான, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த நிழற்குடையின் கீழே பள்ளி மாணவ, மாணவிகளும், தொழிலாளர்களும், முதியோர்களும் நிற்கின்றனர். மேலும் பேருந்திற்காக காத்திருக்கும் போது திடீரென்று மழை பெய்தால் ஒதுங்குவதற்கு வேற இடமில்லாமல் நிழற்குடையின் கீழே நிற்பதால் பயணிகள் முற்றிலுமாக நனைந்து விடுகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த நிழற்குடையை இடித்துவிடடு, புதிய நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவொற்றியூர் பேருந்து நிறுத்தத்தில் இடிந்து விழும் நிலையில் நிழற்குடை: புதிதாக கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Nizhalkudai ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...