×

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

ஓசூர்: ஓசூர் அருகே அத்திப்பள்ளி பகுதியில் பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்தைச் சேர்ந்த தலா ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் கோரிக்கை விடுத்தார். ஓசூர் அருகே பட்டாசு கடை தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். அத்திப்பள்ளியில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அரூர் சம்பத்குமார் எம்எல்கு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து அன்பழகன் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பட்டாசு கடை விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய இழப்பு. நன்கு படித்த, படித்துக் கொண்டிருந்த இளைஞர்கள், குடும்ப கஷ்டத்தால், வேலைக்கு வந்த இடத்தில் தங்களின் உயிர்களை இழந்துள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை. எனவே, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முன்வர வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Osur ,Attipalli ,Dinakaraan ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு