×

கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ போர்ட்டர்கள் படுகாயம்

ரஜோரி: ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா பரிவில் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ராணுவ போர்ட்டர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நிலத்தில் கிடந்த கண்ணி வெடியை அவர்கள் மிதித்து விட்டனர். இதில் கண்ணி வெடி வெடித்து ராஜ்குமார், அஸ்வினி குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அவர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிரிகள் எல்லையை கடந்து ஊடுருவாமல் தடுக்க வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு எல்லையோர நிலத்தில் கிடக்கும். அதை கவனிக்காமல் மிதித்து விட்டால் இதுபோன்ற விபத்து ஏற்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ போர்ட்டர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : RAJORI ,INDIA ,PAKISTAN ,NAVSHERA PARI ,RAJORI DISTRICT ,JAMMU ,KASHMIR ,
× RELATED பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் 6 பயங்கரவாதிகள் பலி