×

இந்திய விமான படைக்கு புதிய கொடி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: இந்திய விமானப் படைக்கான புதிய கொடியை ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி வெளியிட்டார். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 91வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், விமானப்படை தினத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள செய்தியில், ‘விமானப்படை தினத்தில் நமது விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

சவால்களை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கும் வலிமையான, தைரியமான மற்றும் ஆற்றல்மிக்க விமானப்படையைக் கொண்டிருப்பதில் தேசம் பெருமிதம் கொள்கிறது. வானத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி, மனிதாபிமான உதவிகளிலும் முன்னணியில் இருக்கும் நமது எழுச்சியூட்டும் ஹீரோக்களுக்கு தலை வணங்குகிறேன்’ என பதிவிட்ட்டுள்ளார். இதேபோல், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ‘விமானப்படை தினத்தில் அனைத்து விமான வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

இந்திய விமானப்படையின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் சிறந்த சேவை மற்றும் தியாகம் நமது வானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது’ என பதிவிட்டுள்ளார். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், விமானப்படை தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தின அணிவகுப்பில் பங்கேற்ற விமானப்படையின் ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, விமானப்படைக்கான புதிய கொடியை வெளியிட்டு, விமானப் படையின் சாதனைகள் குறித்து உரையாற்றினார்.

The post இந்திய விமான படைக்கு புதிய கொடி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,President ,PM ,New Delhi ,Air Chief ,Marshal VR Chaudhary ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...