×

இஸ்ரேலில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஜெருசலம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது: வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல்

இஸ்ரேல்: ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 100 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது. காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது.

கடந்த 16 ஆண்டுகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் , இஸ்ரேலுக்கும் இடையே பல போர்கள் நடந்துள்ளன. இந்தநிலையில், இன்று காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 5000 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.

இதுவரை நடந்த மிகக் கொடூரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த திடீர் தாக்குதல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இஸ்ரேல் போர்க்கால நிலையை அறிவித்துள்ளது. இந்த ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 100 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் , இஸ்ரேலுக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலிருந்தும் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 247 பாலஸ்தீனியர்கள், 32 இஸ்ரேலியர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதா ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெருசலம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிழந்துள்ளனர்.

The post இஸ்ரேலில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஜெருசலம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது: வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jerusalem ,Israel ,Tamil Welfare Department ,HAMAS ,ISRAELI FOREIGN MINISTRY ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்