×

சின்ன வெங்காயம் விலை கிடுகிடு: நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

 

நிலக்கோட்டை, அக். 8: திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளபட்டி, நடுப்பட்டி, மேலக்கோட்டை, கோடாங்கிபட்டி, ரெட்டியார்சத்திரம் ஆகிய பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையும் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கேரள உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது நிலக்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் நன்கு விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் வெங்காய மண்டியில் வரத்து குறைவால் கடந்த 2 நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.40
முதல் ரூ.50 வரை விற்பனையான சின்ன வெங்காயம், தற்போது ரூ.90க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வெங்காய சீசன் முடிவடைந்தது. குடோன்களின் பழைய இருப்பு மட்டும் உள்ளது.சில நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது’ என்றனர்.

The post சின்ன வெங்காயம் விலை கிடுகிடு: நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Attur ,Chinnalapatti ,Nadupatti ,Melakottai ,Kodangipatti ,Rediyarchatram ,Dindigul district ,Dinakaran ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்