×

புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

 

ஈரோடு, அக். 8: புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் அந்நாளில் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவர். அதன்படி, புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையான நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு சென்றனர்.

இதில், ஈரோடு-பவானி செல்லும் சாலையில் உள்ள பெருமாள் மலையில் புரட்டாசி சனிக்கிழைமையையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடந்தது. இதில், அதிகாலை முதலே மலை படிக்கட்டுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டு சென்றனர்.

மகா தசல் வழிபாடு: ஈரோடு வஉசி மைதானம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் சவுராஷ்டிரா சபை சார்பில் புரட்டாசி 3வது சனிக்கிழமையான நேற்று மகா தசல் என்ற பெயரில் வழிபாடு நடந்தது. விழாவில் பக்தர்கள் யாசகம் மூலம் கிடைத்த அரிசியை கொண்டு உணவு சமைத்து, பெருமாளுக்கு படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

The post புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Puratasi ,Erode ,Purattasi ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...