×

கோவையில் ரூ.13.01 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணி: அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

 

கோவை, அக். 8: தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கோவை மாநகராட்சி பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டார். முதலாவதாக சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழாவை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து கல்விக் கடன்களை வழங்கினார்.

பின்னர், கோவை மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டி பூந்தோட்டம் நகரில் ரூ.72 லட்சத்தில் ஸ்டெம் பூங்கா அமைக்கும் பணி, கோவை மாநகராட்சி 48வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோட்டில் ரூ.2.95 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 69வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை கிருஷ்ணசாமி சாலை மேற்புறத்தில் மழை நீர் வடிகாலுடன் கூடிய ரூ.2 கோடியே 18 லட்சத்தில் நடைபாதை கட்டுதல், 72 வது வார்டுக்கு உட்பட்ட திருவேங்கடம் சாலை முதல் முத்தண்ணன் குளம் வரை ரூ. 1.47 கோடியில் மழை நீர் வடிகால் கட்டுதல்,

என்யுஎச்எம் நிதியின் கீழ் வஉசி பூங்கா மைதானம் அருகில் உள்ள சாலையில் ஆரோக்கியமான சுகாதாரமான உணவு விற்கும் தெரு ரூ.1 கோடியில் அமைக்கும் பணி, 54 வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலை, அவிநாசி சாலை முதல் வரதராஜபுரம் சந்திப்பு வரை ரூ. 4.69 கோடியில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் உள்ளிட்ட ரூ.13.01 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணைமேயர் வெற்றி செல்வன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

The post கோவையில் ரூ.13.01 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணி: அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Minister ,Muthuswamy ,Tamil Nadu Housing and Prohibition ,Muthusamy ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...