×

அரியலூரில் அண்ணா பிறந்த நாளில் சைக்கிள் போட்டி

அரியலூர், அக்.8: அரியலூர் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளதாவது: போட்டியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: போட்டிகள் மூன்று பிரிவுகளாக ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் நடத்தப்படும். 13 வயதிற்குட்பட்டவர்கள் 01.01.2010, 15 வயதிற்குட்பட்டவர்கள் 01.01.2008, 17 வயதிற்குட்பட்டவர்கள் 01.01.2006 அன்றோ அதன் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர், மாணவியர் தங்கள் சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும். சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிள் இருத்தல் வேண்டும். இந்தியாவில் தயார் செய்யப்பட்ட சாதாரண சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும்.

அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட சைக்கிள்களை பயன்படுத்துதல் கூடாது. மாணவர்கள் போட்டி துவங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வயது சான்றிதழுடன் வந்தடைய வேண்டும். வயது சான்றிதழ் பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பெற்றுவருதல் வேண்டும். தங்களது ஆதார் அட்டை ஜெராக்ஸ் நகல் சமர்ப்பிக்கவேண்டும். சைக்கிள்ப்போட்டிகளில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ தனிப்பட்ட பொது இழப்புக்கோ பங்குபெறும் மாணவ, மாணவிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்கவேண்டும். இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்பித்த பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

சைக்கிள் போட்டி 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., தொலைவுகளும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., தொலைவுகளும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., தொலைவுகளும் நடைபெறும். போட்டிகள் நடைபெற இருக்கும் தடங்கள் வரும் 14ம் தேதி அன்று போட்டிகள் நடைபெறும் முன் தெரிவிக்கப்படும். இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிப்பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதமும் 4 முதல் 10 இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத்தொகையினை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழிமுறைகள் மூலமாகவோ வழங்கப்பட உள்ளது.

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் தங்களின் வயது சான்றிதழ்களுடன் வந்து போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை கைப்பேசி 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். ‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றா ரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்’’ என்றார் அய்யன் திருவள்ளுவர். அத்தகு சிறப்பு மிக்க விவசாயிகளின் நலன்கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

The post அரியலூரில் அண்ணா பிறந்த நாளில் சைக்கிள் போட்டி appeared first on Dinakaran.

Tags : Anna ,Ariyalur ,Annie Mary Swarna ,Dinakaran ,
× RELATED பெரம்ப லூர் மாவட்டம் 96.44 சதவீதம்...