×

ஒன்றிய அமைச்சர்களிடம் மீனவர்கள் வலியுறுத்தல்

பேராவூரணி,அக்.8: மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர்களிடம் மீனவர்கள் ேகாரிக்கை விடுத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஒன்றிய அரசின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ், ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ஒன்றிய மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் ஆகியோர் மீனவர்களிடம் நேற்று குறைகளை கேட்டறிந்தனர். மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சர்களிடம் தெரிவித்தனர். மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் துாண்டில் வளைவு அமைக்க வேண்டும். ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு வசதியாக பழைய படகுகளுக்கு மாற்றாக ஆழ்கடலுக்கான படகு ஒன்றிய, மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது.

இதற்கான மானியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு வழங்க வேண்டும். மல்லிப்பட்டினம் துறைமுகத்தை ஒட்டியுள்ள கட்டையப்பாடு,சின்னமனை ஆற்றின் முகத்துவாரங்களை ஆழப்படுத்த வேண்டும். பாக் வளைகுடா பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம்தேதி வரை உள்ள மீன்பிடி தடைக்காலத்தை அக்டோபர் 15ம்தேதியில் இருந்து டிசம்பர் 14ம்தேதியாக மாற்ற வேண்டும். மீனவர்களுக்கு வழங்கும் டீசலை உற்பத்தி விலைக்கே ஒன்றிய அரசு வழங்க வேண்டும். கடலில் மீனவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், இயற்கை இடர்பாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டால் உடனடியாக அவர்களை கரைக்கு கொண்டு வரும் வகையில், கடல் ஆம்புலன்ஸ் ஒன்றை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி விட்டால் அவர்களின் மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினர் கடலில் வீசியெறிந்து சேதப்படுத்தி அட்டூழியம் செய்கிறார்கள். மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மீனவர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர். நிகழ்ச்சியில், மீன்வளத்துறை இணை செயலர் நீத்துக்குமாரி, கலெக்டர் தீபக் ஜேக்கப், மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, தஞ்சாவூர் மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 பாக் வளைகுடா பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம்தேதி வரை உள்ள மீன்பிடி தடைக்காலத்தை அக்டோபர் 15ம்தேதியில் இருந்து டிசம்பர் 14ம்தேதியாக மாற்ற வேண்டும். மீனவர்களுக்கு வழங்கும் டீசலை உற்பத்தி விலைக்கே ஒன்றிய அரசு வழங்க வேண்டும். கடலில் மீனவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், இயற்கை இடர்பாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டால் உடனடியாக அவர்களை கரைக்கு கொண்டு வரும் வகையில், கடல் ஆம்புலன்ஸ் ஒன்றை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும்.

The post ஒன்றிய அமைச்சர்களிடம் மீனவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union ,Beravoorani ,Thanjavur District ,Mallipatnam ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...