×

பேட்மின்டனில் தங்கம்: சாத்விக் – சிராக் அசத்தல்

பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் சந்திரசேகர் ஷெட்டி இணை நேற்று நடந்த பைனலில் கொரியாவின் சோல்கயூ சோய் – வோன்ஹோ கிம் இணையை 21-18, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பேட்மின்டன் போட்டியில் முதல்முறையாக தங்கத்தை வென்று அசத்தியது. விறுவிறுப்பான இப்போட்டி 57 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

இதற்கு முன், 1974ல் தொடங்கி பேட்மின்டனில் இந்தியா 10 பதக்கங்களை வென்றிருந்தது. அவற்றில் 2018ல் பி.வி.சிந்து வெள்ளி வென்றதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. நடப்பு தொடரில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய் வெண்கலம் வென்றார். பிரணாய், சாத்விக், சிராக் ஆகியோர் வெள்ளி வென்ற ஆடவர் அணியிலும் இடம் பெற்றிருந்தனர்.

The post பேட்மின்டனில் தங்கம்: சாத்விக் – சிராக் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Chadwick ,Chirag ,India ,Satwik ,Sairaj Rankireddy ,Chirag Chandrasekhar Shetty ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு