×

இந்திய கணவரை கொன்ற பிரிட்டன் பெண்ணுக்கு மரண தண்டனை: உபி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இந்திய கணவரை கொன்ற பிரிட்டன் பெண்ணுக்கு மரண தண்டனை: உபி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்புஷாஜகான்பூர்: உத்தரபிரதேசத்தின் பண்டா காவல்நிலையத்துக்குட்பட்ட பசந்த்பூரில் வசித்து வந்த சுக்ஜித் சிங்(34) கடந்த 2002ம் ஆண்டு வேலை தேடி இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு ஓட்டுநர் வேலை கிடைத்த நிலையில், டெர்பி என்ற பகுதியில் வசித்து வந்த ராமன்தீப் கவுர் என்ற பெண்ணை காதலித்து, 2005ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அர்ஜுன்(9), ஆர்யன்(7) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 2016 ஜுலை 28ம் தேதி விடுமுறையின்போது ஷாஜகான்பூருக்கு வந்தார்.

2016 செப்டம்பர் 1ம் தேதி வீட்டில் தன் மகன்களுடன் சுக்ஜித் சிங் தூங்கி கொண்டிருந்தபோது, ராமன்தீப் கவுர் தன் நண்பர் குர்தீப் சிங்குடன் சேர்ந்து, கூர்மையான ஆயுதங்களால் சுக்ஜித் சிங்கை தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் பிரிட்டன் பெண் ராமன்தீப் கவுருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அவரது நண்பர் குர்தீப் சிங்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post இந்திய கணவரை கொன்ற பிரிட்டன் பெண்ணுக்கு மரண தண்டனை: உபி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : UP ,Shahjakanpur ,Basandpur ,Banda ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED ஆர்எல்டி பிரமுகர் கட்சிக்கு முழுக்கு