×

கபடியில் இந்தியாவுக்கு 2 தங்கம்


ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் கபடியில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி அசத்தியது. மகளிர் பைனலில் இந்தியா – சீன தைபே அணிகள் மோதின. ஏற்கனவே லீக் சுற்றில் இந்த 2 அணிகளும் 34-34 என டிரா செய்திருந்தன. இந்திய அணிக்கு வெற்றி கிடைக்காத ஒரே ஆட்டம் அதுதான். அதனால் பைனலில் பொறுப்புடன் விளையாடிய இந்திய வீராங்கனைகள் 26-25 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினர். இது இந்தியாவுக்கு 100வது பதக்கமாக அமைந்தது.

ஆண்கள் கபடி பைனலில் இந்தியா – ஈரான் மோதின. முதல் பாதியில் இந்தியா 17-13 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் ஈரான் இந்தியாவை 2 முறை ஆல் அவுட் செய்தது.  ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 28-28 என சமநிலை வகித்தன. ஆட்டம் முடிய 2 நிமிடங்களே இருந்த நிலையில், கேப்டன் பவன்குமார் சென்ற ரெய்டு சர்ச்சையானது. புள்ளிகள் வழங்குவதில் நடுவர்களின் பாரபட்சமான முடிவை எதிர்த்து இந்தியா முறையீடு செய்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நீண்ட சர்ச்சையின் முடிவில் இந்தியாவுக்கு 3, ஈரானுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. அதன் பிறகு எஞ்சிய ஒரு நிமிடத்தில் மேலும் 2 புள்ளிகள் பெற்ற இந்தியா 33-29 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் பெற்றது.

The post கபடியில் இந்தியாவுக்கு 2 தங்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Kabaddi ,Hangzhou ,Asian Games ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்