×

நியூஸ்கிளிக் விவகாரம் இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க சீனாவிடம் இருந்து நிதி: எப்ஐஆரில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க சீனாவிடம் இருந்து நியூஸ்கிளிக் இணையதளம் பணம் பெற்றதாக எப்ஐஆரில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நியூஸ்கிளிக் செய்தி இணையதளம் பணம் பெற்று கொண்டு சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அதன் தலைமை செய்தி ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் அமித் சக்ரவர்த்தியை உபா தடை சட்டத்தின் கீழ் கடந்த செவ்வாய் கிழமை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறையினரின் எப்ஐஆரில், “இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்கவும், இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை வளர்க்கவும், உள்நாட்டுக் கொள்கைகள், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை விமர்சித்தும், சீனாவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஊக்குவித்தும் வேண்டுமென்றே செய்திகளை பரப்பியது. இதற்காக, இந்தியாவில் செயல்படும் சீனாவின் ஆயிரக்கணக்கான போலி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மூலம் பெருமளவிலான நிதி மறைமுகமாக வழங்கப்பட்டு உள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா, “கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்க ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான மக்கள் கூட்டணி (பிஏடிஎஸ்) என்ற குழுவுடன் சேர்ந்து சதி செய்தார் என்றும் எப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

The post நியூஸ்கிளிக் விவகாரம் இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க சீனாவிடம் இருந்து நிதி: எப்ஐஆரில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Newsclick ,New Delhi ,Delhi Police ,China ,India ,Newsclick… ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு