×

ராகுல், கார்கேவுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு: ‘இந்தியா கூட்டணி’ அடுத்த கூட்டம் குறித்து ஆலோசனை

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கார்கேவின் வீட்டில் நடந்தது. அப்போது இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நடக்கும் இடம் மற்றும் வரும் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள வகுக்க வேண்டிய வியூகங்கள் பற்றி பேசியதாக தெரிகிறது. கடந்த ஆக 31, செப் 1 ஆகிய நாட்களில் மும்பையில், இந்தியா கூட்டணியின் 3வது சந்திப்பு நடந்தது. 4வது கூட்டத்தை மேற்கு வங்கத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பற்றி தனது டிவிட்டரில் பதிவிட்ட கார்கே, ‘ இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேசினோம். எங்களது கொள்கை வழியில் நடப்பதன் மூலம் அனைத்து சவாலுக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு பற்றி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்ட சரத்பவார், ‘மரியாதை நிமித்தம் நான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் அவரையும், ராகுல் காந்தியையும் சந்தித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ராகுல், கார்கேவுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு: ‘இந்தியா கூட்டணி’ அடுத்த கூட்டம் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : SARATHPAWAR ,RAGUL, ,KARKAY ,INDIA ALLIANCE ,NEW DELHI ,Nationalist Congress ,Congress ,Malikarjuna Karke ,Ragulkanthi ,Delhi ,Saratpavar ,Rahul ,Karke ,Dinakaraan ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே...