×

மைசூரு தசரா விழாவில் விமான கண்காட்சி நடத்த ஒன்றிய அரசு அனுமதி

பெங்களூரு: மைசூரு தசரா விழாவில் விமான கண்காட்சி நடத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா வரும் 15ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. இதனிடையில் மைசூரு தசரா விழாவை முன்னிட்டு சிறப்பு விமான கண்காட்சி நடத்த அனுமதி வழங்கும்படி ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதினார். அதையேற்று விமான கண்காட்சி நடத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கி கடிதம் அனுப்பியுள்ளது. அதை தொடர்ந்து விமான கண்காட்சி நடத்தப்படும் மைதானத்தை மாவட்ட கலெக்டர் கே.வி.ராஜேந்திரா மற்றும் விமானப்படை அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

The post மைசூரு தசரா விழாவில் விமான கண்காட்சி நடத்த ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Dussehra festival ,Mysore ,BENGALURU ,Union government ,Mysore Dussehra festival ,Mysuru Dussehra ,
× RELATED விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார...