×

மதுபான கொள்கை வழக்கு ஆம் ஆத்மி எம்பியின் உதவியாளரிடம் விசாரணை

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மியின் எம்பியான சஞ்சய் சிங்கை கடந்த புதன்கிழமையன்று அமலாக்கத்துறை கைது செய்தது.டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் அரோரா என்பவரிடம் சஞ்சய் சிங் ரூ.2 கோடி பணத்தை 2 தவணையாக பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. ஆனால் சஞ்சய் சிங் அதை மறுத்துள்ளார். சஞ்சய்சிங்கை 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், சஞ்சய் சிங்கின் உதவியாளர்களான சர்வேஸ் மிஸ்ரா,விவேக் தியாகி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியது. அதில்,சர்வேஸ் மிஸ்ரா நேற்று காலையிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

The post மதுபான கொள்கை வழக்கு ஆம் ஆத்மி எம்பியின் உதவியாளரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Aamadmi ,NEW DELHI ,Sanjay Singh ,Amami ,Delhi ,Aadmi ,Dinakaraan ,
× RELATED அமலாக்கத் துறை வழக்கு காணொலி மூலம் கெஜ்ரிவால் ஆஜர்