×

‘குவான்டிடேட்டிவ் எலக்ட்ரோ என்செலபோகிராம்’மூளை பாதிப்பை கண்டறிய நவீன கருவி கண்டுபிடிப்பு: மருத்துவர் தகவல்

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கர்மா பீக் பிரைய்ன் எனும் மருத்துவ சேவை மற்றும் ஆய்வு மையம், ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறன் படைத்த சிறப்பு குழந்தைகளை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது இந்த மையம், மூளை பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிவதற்கு நவீன கருவி மற்றும் சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து, மருத்துவர் கெவின் மர்பி கூறியதாவது: பெர்சனலைஸ்ட் ட்ரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் தெரபி எனப்படும் புதிய சிகிச்சை முறையை, மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் இணைந்து நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த குழு மூளை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அல்லது மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கு முன்னர் குவான்டிடேட்டிவ் எலக்ட்ரோ என்செலபோகிராம் எனும் கருவியை கண்டறிந்து, அதன் மூலமாக எந்த மாதிரியான சிகிச்சையை வழங்குவது என தீர்மானித்து அவர்களை மேம்படுத்துகிறது.

புதிய சிகிச்சை முறை வெகுவாக பலன் அளித்து வருகிறது. இது நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கும், இந்த சிகிச்சையை வழங்குவதற்கு சுகாதார நிபுணர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தொடர்பான இலவச சேவை மற்றும் மதிப்பீடுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள contact@karmapeakbrain.com எனும் மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் கீர்த்தி சுந்தர், லட்சுமி சஞ்சய், பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ‘குவான்டிடேட்டிவ் எலக்ட்ரோ என்செலபோகிராம்’மூளை பாதிப்பை கண்டறிய நவீன கருவி கண்டுபிடிப்பு: மருத்துவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Karma Peak Brain ,Dinakaran ,
× RELATED ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக...