×

தீவிரமடையும் இந்தியா, கனடா மோதல் தூதரக அதிகாரிகளை திரும்ப பெறும் கனடா: கோலாலம்பூர், சிங்கப்பூருக்கு மாற்ற திட்டம்

டொரான்டோ: கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெற இந்தியா வலியுறுத்திய நிலையில், இந்தியாவிலுள்ள தூதரக அதிகாரிகளை திரும்ப பெறும் பணியை கனடா தொடங்கி உள்ளது. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி வௌியேறவும் கனடா கூறியது.

இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரியை வௌியேறும்படி இந்தியா உத்தரவிட்டது. மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் 62 பேரில் 41 பேரை அக்டோபர் 10ம் தேதிக்குள் திரும்ப பெற வேண்டும் என கனடாவுக்கு இந்தியா வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான தூதரக அதிகாரிகளை கனடா திரும்ப பெறும் பணிகளை தொடங்கி உள்ளது. அவர்கள் அனைவரும் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கனடாவுக்கான உலக விவகாரங்கள் துறை வௌியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் உள்ள கனடா அதிகாரிகள் சமூக வலைதளங்கள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். மேலும் இந்திய அரசும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளதால், எங்கள் அதிகாரிகளை திரும்ப பெறுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

The post தீவிரமடையும் இந்தியா, கனடா மோதல் தூதரக அதிகாரிகளை திரும்ப பெறும் கனடா: கோலாலம்பூர், சிங்கப்பூருக்கு மாற்ற திட்டம் appeared first on Dinakaran.

Tags : India ,Canada ,Kuala Lumpur, Singapore ,Toronto ,
× RELATED கனடா சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதி, பேரக்குழந்தை பலி