×

சிறார் பாலியல் வன்கொடுமை காட்சிகள் டிவிட்டர், யூடியூப், டெலிகிராம் தளங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்

புதுடெல்லி: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை காட்சிகள் அடங்கிய உள்ளடக்கத்தை அகற்றுமாறு டிவிட்டர்,யூடியூப், டெலிகிராம் தளங்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்தை உருவாக்க அரசு உறுதியாக உள்ளது. இணையத்தில் கிரிமினல் மற்றும் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் வெளியாவதை ஏற்க முடியாது. அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

டிவிட்டர், யூடியூப், டெலிகிராம் தளங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பதிவுகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விரைந்து செயல்படாவிட்டால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில்‘‘ இணையத்தில் தீங்கு விளைவிக்கும் பதிவுகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post சிறார் பாலியல் வன்கொடுமை காட்சிகள் டிவிட்டர், யூடியூப், டெலிகிராம் தளங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Union government ,Twitter ,YouTube ,Telegram ,New Delhi ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...