×

பட்டாபிராமில் சோகம் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பரிதாப பலி

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், அண்ணா நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் இளவரசி(36). இவரது கணவர் பச்சையப்பன் இறந்த நிலையில், மகன் தன்வந்த்(10) உடன் வசித்து வந்தார். இதில், தன்வந்த், தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சிறுவனுக்கு 3 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால், திருநின்றவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் திருநின்றவூரில் உள்ள அதே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, சிறுவன் அங்கு திடீரென மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனே உறவினர்கள் சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பட்டாபிராம் போலீசார், சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதில், 10 வயது சிறுவன் மரம் காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின், தகவல்களை மாவட்ட மருத்துவர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காத மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் தோறும் காய்ச்சலுக்காக வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர், மாவட்ட மருத்துவ அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து கூறினர்.

The post பட்டாபிராமில் சோகம் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Patabram ,AVADI ,PATAPRAM, ANNA NAGAR, TIRUVALLUR STREET, PRINCESS ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!