×

இந்திய விமானப்படையின் 91வது ஆண்டு விழா ஏற்பாடுகள்; பிரயாக்ராஜில் விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை..!!

லக்னோ: இந்திய விமானப்படையின் 91வது ஆண்டு விழாவையொட்டி உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்திய விமானப்படையின் ஆண்டுவிழா நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளதையொட்டி உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் ஒருவாரமாக நடந்து வரும் நிலையில், சாகச நிகழ்ச்சிக்கான பயிற்சியில் இன்று வீரர்கள் ஈடுபட்டனர்.

வீரர்களின் அணிவகுப்பு பயிற்சியும், பிரயாக்ராஜில் நடைபெற்றது. பயிற்சிகளை காண ஏராளமானோர் அங்கு குவிந்தனர். நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் ட்ரோன்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

The post இந்திய விமானப்படையின் 91வது ஆண்டு விழா ஏற்பாடுகள்; பிரயாக்ராஜில் விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை..!! appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,Prayagraj ,Lucknow ,Priyagraj, Uttar Pradesh ,Anniversary ,Priyagraj ,
× RELATED விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு