×

வனப்பகுதியில் தூக்கிட்டு டிரைவர் தற்கொலை: அழுகிய நிலையில் சடலம் மீட்பு

 

கோத்தகிரி,அக்.6: கோத்தகிரி அருகேயுள்ள எஸ்.கைக்காட்டி பகுதியை சேர்ந்த சேகர்(53). டிரைவரான இவர் சொந்தமாக சுற்றுலா வாகனம் வைத்திருந்தார். சேகர் கடந்த 16ம் தேதி காலை வீட்டில் இருந்து வாகனம் பழுது பார்க்கும் இடத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இவரை அக்கம்பக்கத்தில் மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது மனைவி கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோத்தகிரி போலீசார் இவரை தேடி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு செல்லும் வழியில் உள்ள பிரைரி பகுதியில் உள்ள சாலை யோர வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சேகரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், சேகரின் உறவினர்களை அழைத்து சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை வைத்து காவல்துறையினர் உறுதி செய்தனர். சேகர் தற்கொலை குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வனப்பகுதியில் தூக்கிட்டு டிரைவர் தற்கொலை: அழுகிய நிலையில் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Shekhar ,S. Kaikkati ,Dinakaran ,
× RELATED கால தாமதம் செய்யாமல் பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி மக்கள் மனு