×

புதுவையில் தங்கி வேலை செய்த மயிலாடுதுறை ெதாழிலாளி சாவு

புதுச்சேரி, அக். 6: மயிலாடுதுறை, சீர்காழி, கடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (63). இவர் கடந்த 10 வருடங்களாக புதுச்சேரி, திலாசுபேட்டை, வீமன் நகரிலுள்ள மாரியப்பன் (57) என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வந்தாராம். ராபர்ட் என்பவர் மூலம் மாரியப்பனுடன் பாலசுப்பிரமணியன் அறிமுகமாகி வேலை செய்து வந்த நிலையில், கடந்த 2 வாரமாக சிதம்பரம், அண்ணாமலை நகரில் வசிக்கும் சரவணன் (40) என்பவருடன் தங்கி புதுச்சேரியில் வேலை செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் வீமன் நகரிலுள்ள மாரியப்பன் வீட்டில் முன்பு பாலசுப்பிரமணியன் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.இதுதொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடல்நிலை பாதித்து இறந்தாரா அல்லது வேறு காரணமா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கருவடிகுப்பம், மேஜர் சரவணன் நகரில் வசித்த தொழிலாளி திருநாவுக்கரசு (42) சமீபகாலமாக உடல்நிலை பாதித்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி பேபிஷாலினி அளித்த புகாரின்போில் லாஸ்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றன.

The post புதுவையில் தங்கி வேலை செய்த மயிலாடுதுறை ெதாழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Ethazilali ,Puduvai ,Puducherry ,Balasubramanian ,Kadavasal, ,Sirkazhi, Mayiladuthurai ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை