×

மாங்கோட்டை ஊராட்சியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

 

கறம்பக்குடி,அக்.6: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்கோட்டை ஊராட்சியில் கொசு பரவாமல் தடுக்கும் வகையிலும் டெங்கு ஒழிப்பை முற்றிலும் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கொசு ஒழிப்பு மருந்துகளை தெளித்து தூய்மை பணியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா ரத்தினம் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராஜன் முன்னிலையில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்றன. கொசு மருந்து அடிக்கும் நிகழ்ச்சியில் செவிலியர் கீதா, ஊராட்சி செயலர் முருகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மாங்கோட்டை ஊராட்சியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : MANGOTA URACHI ,KARAMPAKUDI ,PUTHUKKOTA ,DISTRICT ,KARAMPAKUDI URADSI UNION ,
× RELATED குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்...