×

காஸ் கசிவை சரி செய்தபோது தீ பெண் உள்பட 2 பேர் கருகி பலி

நாமக்கல்: நாமக்கல்லில் வீட்டிலிருந்த சமையல் சிலிண்டரில் காஸ் கசிவை ஊழியர் சரிசெய்தபோது தீப்பற்றியதில் பெண் உள்பட 2 பேர் கருகி பலியானார்கள். நாமக்கல் கோட்டை ரோடு ஆஞ்சநேயர் கோயில் வீதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (71). இவரது வீட்டிற்கு நேற்று காலை காஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் (27), சிலிண்டர் டெலிவரி செய்ய வந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கோயில் அர்ச்சகர் நாராயணன் மனைவி தனலட்சுமி (59), தனது வீட்டில் காஸ் சிலிண்டரில் கசிவு இருப்பதாக கூறினார். அருண்குமார் அங்கு சென்று காஸ் கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென வீட்டில் தீப்பிடித்து வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதில் தனலட்சுமி, அருண்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதன்காரணமாக பார்த்தசாரதி வீட்டிலும் புகை பரவியது. இதில் பார்த்தசாரதி சிக்கி மயங்கினார். தகவல் அறிந்து நாமக்கல் தீயணைப்புத் துறையினர் வந்து பார்த்தசாரதி, தனலட்சுமி, காஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் ஆகிய மூவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பார்த்தசாரதி, தனலட்சுமி ஆகிய இருவரும் இறந்தனர். அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

The post காஸ் கசிவை சரி செய்தபோது தீ பெண் உள்பட 2 பேர் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : Gaz ,NAMAKALL ,
× RELATED நாமக்கல்லில் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..!!